Home

மீன் வளர்ப்பில் அறிவியலும், அனுபவமும்.

1985 ஆம் ஆண்டு முதல் கிராம பஞ்சாயத்து குளங்களை வருடக்குத்தகைக்கு ஏலம் எடுத்து கெண்டை மீன் குஞ்சுகள் விற்பனையாளர்கள் எனக்கு நல்ல குஞ்சுகள் என்று விற்பனை செய்த விரல் நீள அனைத்துரக குஞ்சுகளையும் நம்பி வாங்கி மீன் குஞ்சு விற்பனையாளர்கள் கூறியது போலவே நானும் குளத்தில் எண்ணிக்கையினை பராமரிப்பு செய்து, தீவனம் முறையாக கொடுத்ததில் எனக்கு 1 ஏக்கரில் இருப்பு செய்த 3200 குஞ்சுகளில் 1500 மீன் குஞ்சுகள் மட்டுமே 9 மாதம் கழித்து பிடித்தபோது வருடா வருடம் கிடைத்தது. மேற்படி கிடைத்தது 1500 மீன் குஞ்சுகளில் 300 மீன்கள் மட்டுமே, 750 கிராம் முதல் 1 கிலோ வரை இருந்தது. மீதம் இருந்தது 1200 குஞ்சுகள் சராசரியாக 100 கிராம் எடை அளவில் இருந்தது. இதனால் குத்தகைக்கு எடுத்து மீன் வளர்ப்பு செய்து முன்னேறிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு ஏமாற்றமே அடைந்த நான், இளங்கலை படிப்பில் வேதியலை முதன்மை பாடமாக தேர்ந்தெடுத்து அதில் துணைப் பாடமாக இயற்பியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் விவசாயத் துறை ஆகிய பாடங்களை படித்திருந்ததாலும் விவசாயக் குடும்பத்தில் பிறந்து நேரடியாக விவசாயம் செய்து தினமும் குளத்தில் குளித்து வந்ததால் என்னிடம் இருந்த அறிவியலையும், எனக்கு கிடைத்த அனுபவத்தையும் ஒன்றுபடுத்தி மீன் வளர்ப்பு துறையில் நாம் மாற்றம் செய்ய வேண்டிய வளர்ப்பு முறையில், தீவனம் அளித்தல் முறை, நீர் மேலாண்மை, எல்லாவற்றிற்கும் மேலாக மீன் குஞ்சுகளை தேர்ந்தெடுத்தல், நோய் தடுப்பு முறை ஆகிய நான்கு வழிகளை முறையாக கையாண்டால் மட்டுமே இறால் வளர்ப்பைவிட அதிக மகசூல் பெறமுடியும் என்ற எண்ணத்தை செய்கை மூலம் அறிந்து கொண்டேன்.
மேற்படி நான் கூறியவற்றில் முதன் முதலாக குஞ்சுகளை தேர்ந்தெடுத்தல் எப்படி என்பதைப்பற்றி அனுபவம் மற்றும் அறிவியல் பூர்வமாக நான் அறிந்ததை, எனக்கு தெரிந்ததை விவசாயிகளுக்கு தெரிவிக்க விருப்பமுடையவனாக இருப்பதால் என்னுடைய அனுபவத்தை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
முதன் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. மீன் குஞ்சுகள் எத்தனை மாத காலம், எத்தனை முறை நாற்றாங்காலை மாற்றி இடமாற்றம் செய்து இருப்பு வைக்க வேண்டும் என்பதேயாகும். எல்லோருக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்ல வேண்டுமானால் "இந்த வருட முட்டை குஞ்சு அடுத்த வருடம்தான் குளத்தில் விட வேண்டும்" என்பதேயாகும்.

நீர் மேலாண்மையில் நாம் கடைபிடிக்க வேண்டியது, நீரில் அமிலகாரத் தன்மை இல்லாமல் நடுநிலையான pH அளவானது 7 முதல் 8.5 வனர இருக்கும்படி நீர் மேலாண்மை செய்தல் மட்மமே, நீரில் இயற்கையாக வளர்ந்து மீன்களுக்கு அத்தியாவசிய உணவாக பயன்படும் நுண்ணுயிர் தாவரங்கள் வளரும், அதோடு மீன் குஞ்சுகளும் சேர்ந்து வளரும்.
மீன்களுக்கு தீவனம் அளிக்கும் முறை மிகவும் முக்கியமானதாகும். குளங்களில் வளரும் மீன்கள் 90% உணவினை நீரில் இயற்கையாகவே கிடைக்கும் நுண்ணுயிர் தாவரங்களையும், நீரில் இயற்கையாக உள்ள தாது உப்புக்களை எடுத்துக் கொண்டு மீன்கள் வளர்ச்சியடைகின்றன. நாம் தற்பொழுது மீன்களுக்கு கொடுக்கும் உணவானது அதாவது (தவிடு, புண்ணாக்கு, சோயா, சோளம்) ஆகியவற்றை மீன்கள் தன்னுடைய உணவில் 10% மட்டுமமே எடுத்துக்கொள்கிறது. நாம் தேவையில்லாமல் அதாவது மீன் பற்றிய அறிவியல் கூர்மை மற்றும் மீன்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு பற்றிய எதுவும் தெளிவாக தெரிந்து கொள்ளாமல், அறிவியல் ஞானம் இல்லாத, போதிய அனுபவம் இல்லாத மீன் குஞ்சு பண்ணையாளர்களிடம், மீன் வளர்ப்போர் மீன்களுக்கு உணவளிக்கும் முறையினை பண்ணையாளர்கள் அளித்த தவறான தகவலின் அடைப்படையில் குளத்தில் உணவினை இட்டு நீரின் அமிலகாரத் தன்மையினை சரியான நிலையிலிருந்து மாற்றமடையச் செய்வதோடு மீன்கள் எளிமையான சுவாசம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் மீன்கள் உடல் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.
மீன்களை மாதத்திற்கு ஒரு முறையாவது பிடித்து மீன்களின் வளர்ச்சி, மீன்களின் சுறுசுறுப்புத்தன்மை, மீன்களில் ஏதரவது நோய்கள் பரவி உள்ளனவா என்பது பற்றிய விவரத்தினை நன்கு அறிந்து அதற்கேற்றார் போல் நாம் செயல்பட வேண்டும். நன்நீர் இறால் வளர்ப்பைவிட மீன் வளர்ப்பில் அதிக லாபம் பெற முடியும் என்று சொன்னால் பெரும்பாலானோர் என்னை கேலிசெய்வதாகவே அமையும்.
மீன், முட்டை குஞ்சு 2 சென்டி மீட்டர் நீளம் வளர இரண்டு மாத காலங்களும், 2 சென்டி மீட்டர் அளவிலிருந்து 5 - 6 சென்டி மீட்டர் நீளம் வளர 5 மாத காலங்களும் அதேகபோல் 5 - 6 சென்டி மீட்டர் நீளம் உடைய (Finger Size) விரல் நீள குஞ்சுகள் மீன் வடிவத்தில் உறுமாற்றம் அடைந்த ஸ்டாக் சைஸ் என்று அழைக்கப்படும் 40 கிராம் முதல் 80 கிராம் வரை எடை அளவு அடைந்த குஞ்சுகள் வளர மொத்தத்தில் 7 அல்லது 8 மாதங்கள் ஆகின்றன. மேற்படி எடை அளவு கொண்ட குஞ்சுகளை நாம் வளர்ப்பு குஞ்சுகளாக தேர்ந்தெடுத்து வளர்ப்பு குளங்களில் விட்டு மேற்படி நீர் மேலாண்னம, உணவளித்தல் முறை, நோய் தடுப்பு முறைகளை கையாண்டால் மேற்படி ஸ்டாக் சைஸ் மீன் குஞ்சுகள் நான்கு மரதத்தில் 1 கிலோ எடை கொண்டதாகவும், எண்ணிக்கை குரையாமலும் நாம் அறுவடை செய்யலாம். தனியாருக்கு சொந்தமான குளங்களில் வருடத்திற்கு மூன்று முறை அதாவது நான்கு மாதத்திற்கு ஒரு முறை பெரிய மீன் குஞ்சுகளை (ஸ்டாக் சைஸ்) வளர்ப்பு குளங்களில் விட்டு ஒவ்வொரு முறையும் 3000 கிலோ முதல் 3200 கிலோ வரை அறுவடை செய்யலாம். பஞ்சாயத்துக்கு சொந்தமான குளங்களில் இரண்டு முறை குஞ்சுகளை விட்டு (மேற்படி 1 ஏக்கருக்கு 6000 கிலோ முதல் 6500 கிலோ வரை அறுவடைசெய்யலாம். என் அனுபவத்தின் அடிப்படையில் இது சாத்தியமாக அமைந்தது.
அதன்பின்பு என்னுடைய சுய ஆலேசனையின் படி மற்ற மீன் வளர்ப்பவர்களின் அனுபவங்களையும் கேட்டறிந்ததில் மேற்படி நான் கூறியவை அனைத்தும் சாத்தியமானதே என்று அறிந்து கொண்டு தற்போது உள்ள சூழ்நிலையில் அவசரமரக மீன் வளர்ப்போருக்கு செய்ய வேண்டிய உதவியாக தரமான பெரிய மீன் குஞ்சுகள் பற்றி எடுத்துக்கூறி அதன் பயனையும் புரியவைத்து அதிக லாபம் பெற்று வளமோடு வாழவேண்டும் என்ற எண்ணத்தில் நான் கற்றறிந்த அறிவியல் ஞானத்தையும், 30 ஆண்டு காலமாக மீன் வளர்ப்பில் ஈடுபட்ட அதன் மூலம் கிடைத்த அனுபவத்தையும் கொண்டு தரமான பெரிய மீன்குஞ்சுகளை மீன் விவசாயிகளுக்கு அளிக்கும் வகையில் எனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் குளங்கள் வெட்டி எல்லா குளங்களிலும் பல்வேறு காலகட்டங்களில் சிறிய மீன் குஞ்சுசுளை இருப்பு செய்து நன்கு வளர்த்து பெரிய குஞ்சுகளாக (ஸ்டாக் சைஸ்) விற்பனன செய்து வருகிறேன். மீன் வளர்ப்பில் தாங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மேற்படி கைபேசி எண்ணில் தெரடர்பு கொண்டால் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய நான் எந்த நேரமும் தயாராக உள்ளேன்.
என்னிடம் 1 கிலோ எடை அளவு கொண்ட மீன் குஞ்சுகள் வாங்கி 4 மாதங்கள் வளர்த்தால் 15 கிலோ எடை அளவு மீன்கள் கிடைக்கும். என்னிடம் எந்த மாதத்திலும், எப்போது வேண்டுமானாலும், எல்லா வகை பெரிய மீன் குஞ்சுகளை (ஸ்டாக் சைஸ்) வாங்கி மீன் விவசாயிகள் பயன்பெற வேண்டுமென எண்ணுகிறேன்.

Comments

Total Pageviews